/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேர்தல் செலவின கணக்கு ஒப்படைக்க கலெக்டர் தகவல்
/
தேர்தல் செலவின கணக்கு ஒப்படைக்க கலெக்டர் தகவல்
ADDED : ஏப் 04, 2024 04:10 AM
சிவகங்கை, : சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவு கணக்குகளை நாளை (ஏப்.,5) ஒப்படைக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பு மனு தாக்கல் செய்த நாளில் இருந்து ஏப்.,3 ம் தேதி வரை மேற்கொண்ட அன்றாட செலவின விபரங்களை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
இதற்காக ஏப்., 5, 10, 16 ஆகிய மூன்று நாட்கள் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் செலவு கணக்கு விபரங்களை நாளை (ஏப்.,5) கலெக்டர் பி.ஏ.,(கணக்குகள்) முன்னிலையில், தேர்தல் செலவின பார்வையாளர் மனோஜ்குமார் பி.திரிபாதியிடம் ஒப்படைக்க வேண்டும்.
அன்றாட செலவின கணக்கு பதிவேட்டினை தகுந்த முறையில் பூர்த்தி செய்து, தவறாது ஒப்படைக்க வேண்டும்.

