/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நல்லாசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
/
நல்லாசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ADDED : செப் 14, 2024 04:56 AM
சிவகங்கை: மாநில நல்லாசிரியர் விருது பெற்ற 9 ஆசிரியர்கள் கலெக்டர் ஆஷா அஜித்திடம் வாழ்த்து பெற்றனர்.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 9 ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின விழாவில் தமிழக அரசு நல்லாசிரியர் விருது வழங்கியது.
காளையார்கோவில் அருகே சூசையப்பர் பட்டினம் சகாயராணி மகளிர் பள்ளி தலைமை ஆசிரியை ஜோசப் கமலாராணி, செக்காகுடி புனித ஜோசப் பள்ளி ஆசிரியை ஜாய்சி மேரி, பூலாங்குறிச்சி தி.நி., அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியை வனிதா, காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி., மேல்நிலை பள்ளி ஆசிரியர் முத்துக்குமார், தேவகோட்டை வெளிமுத்தி அரசு நடுநிலை பள்ளி ஆசிரியர் ராஜ்குமார், சிவகங்கை அருகே தேவன்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் வெற்றி வேந்தன், இடையமேலுார் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி, திருப்புவனம் தெற்கு ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ஆசிரியர் கபில்தேவ் ஆகிய 9 பேர் பெற்றனர்.
இவர்கள் நேற்று விருதுடன் கலெக்டர் ஆஷா அஜித்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து உடனிருந்தார்.