/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செம்பனுார் சுகாதார நிலையத்தில் ரூ.2 கோடியில் பணி துவக்கம்
/
செம்பனுார் சுகாதார நிலையத்தில் ரூ.2 கோடியில் பணி துவக்கம்
செம்பனுார் சுகாதார நிலையத்தில் ரூ.2 கோடியில் பணி துவக்கம்
செம்பனுார் சுகாதார நிலையத்தில் ரூ.2 கோடியில் பணி துவக்கம்
ADDED : ஆக 19, 2024 12:30 AM
காரைக்குடி : கல்லல் அருகே உள்ள செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டு ரூ.2 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை, சித்தா பிரிவு, பல் மருத்துவம், தொழு நோய் பிரிவு, சைக்காலஜி உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு செம்பனுார் மட்டுமின்றி கல்லல், சொக்க நாதபுரம், பனங்குடி, கண்டரமாணிக்கம் உட்பட சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். போதிய கட்டட வசதிகள் இல்லாத நிலையில் தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1.27 கோடி மதிப்பீட்டில் புற நோயாளிகள் பிரிவு கட்டட பணிகள் கட்டும் பணி நடந்து வருகிறது. ரூ.80 லட்சத்தில் ஆய்வகம் கட்டும் பணியும் நடைபெற உள்ளது.