/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் நுாலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி
/
திருப்புத்துார் நுாலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி
திருப்புத்துார் நுாலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி
திருப்புத்துார் நுாலகத்தில் போட்டித் தேர்வு பயிற்சி
ADDED : பிப் 25, 2025 06:46 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் கிளை நுாலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட நுாலக அலுவலர் திருஞானசம்பந்தம்தலைமை வகித்தார். வாசகர் வட்டத் தலைவர்ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார். நுாலகர் மகாலிங்க ஜெயகாந்தன் வரவேற்றார். கவிஞர் கோவிந்தராஜன் துவக்கினார்.
வர்த்த சங்க தலைவர் அந்தோணிராஜ், பயிற்சி நிறுவன முதல்வர் அப்துல்வாஹித், எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் பேசினர். பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன்,கவிஞர் பேனாமனோகரன், ஹேமாமாலினி, கவிஞர் சபிதாபானு ஆகியோர் போட்டிதேர்வுகளை சமாளிப்பது குறித்து விளக்கினர்.
கிறிஸ்துராஜா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் விக்டர், முதல்வர் ரூபன் கெளரவிக்கப்பட்டனர். உதவியாளர் குணசேகரன் நன்றி கூறினார்.