/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குன்றக்குடியில் தி.மு.க.,வினருக்கு இலவச பட்டா வழங்குவதாக புகார்
/
குன்றக்குடியில் தி.மு.க.,வினருக்கு இலவச பட்டா வழங்குவதாக புகார்
குன்றக்குடியில் தி.மு.க.,வினருக்கு இலவச பட்டா வழங்குவதாக புகார்
குன்றக்குடியில் தி.மு.க.,வினருக்கு இலவச பட்டா வழங்குவதாக புகார்
ADDED : ஆக 11, 2024 06:12 AM
சிவகங்கை : குன்றக்குடியில் அரசின் இலவச பட்டாவை வசதி படைத்த,தி.மு.க.,வினருக்கே கொடுக்க இருப்பதாக கூறி, கிராம மக்கள் சிவகங்கையில் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் 110 பயனாளிகளுக்கு அரசின் இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கான பணி நடைபெற்று வருகிறது.
பயனாளிகள் தேர்வில் வருவாய்துறையினர் ஈடுபட்டுள்ளனர். குன்றக்குடியில் பல ஆண்டாக குடியிருக்கும் வீட்டு மனை பட்டா இல்லாத ஏழை, நடுத்தர குடும்பத்தினரை பட்டாவிற்கான பயனாளிகள் பட்டியலில் வருவாய்துறையினர் சேர்க்கவில்லை.
மாறாக வசதி படைத்த மற்றும் தி.மு.க.,வினரை பயனாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது.
நேற்று குன்றக்குடியில் இருந்து வந்த பெண்கள், அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் பார்த்திபன் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. கிராம மக்கள் கூட்ட அரங்கிற்குள் நுழைந்து, கலெக்டரிடம் நிலமில்லாத ஏழைகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி புகார் அளித்தனர்.
புகார் அளித்த மக்களிடம், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை தலைமையில் குழு அமைத்து, உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே பட்டா வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் உறுதி அளித்தார்.

