ADDED : ஆக 12, 2024 11:56 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கீழக்கண்டனி ராமராஜ் மகன் பாக்கியராஜ். இவர்களது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தை சிலர் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாககூறி, சிவகங்கை போலீசில் பாக்கியராஜ் ஏற்கனவே புகார் செய்தார்.
நடவடிக்கை எடுக்காததால் நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று பாக்கியராஜ் கலெக்டர் அலுவலகம் வந்தார். தன்னை மிரட்டும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தார்.

