/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மின் கட்டண பில்லில் பழைய யூனிட் விவரம், புதிய மின் கட்டண அறிவிப்பு இல்லாததால் குழப்பம்l
/
மின் கட்டண பில்லில் பழைய யூனிட் விவரம், புதிய மின் கட்டண அறிவிப்பு இல்லாததால் குழப்பம்l
மின் கட்டண பில்லில் பழைய யூனிட் விவரம், புதிய மின் கட்டண அறிவிப்பு இல்லாததால் குழப்பம்l
மின் கட்டண பில்லில் பழைய யூனிட் விவரம், புதிய மின் கட்டண அறிவிப்பு இல்லாததால் குழப்பம்l
ADDED : ஆக 29, 2024 05:17 AM
சிவகங்கை மாவட்டத்தில் மின்வாரியத்தின் கீழ் 4.50 லட்சம் வீடுகளுக்கும், 40 ஆயிரம் தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
வீடுகள், தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை கணக்கீடு செய்து, கட்டணத்தை மின்கணக்கீட்டாளர்கள் குறிப்பிடுவர். அந்த தொகையை மின்வாரிய அலுவலகத்தில் மின் பயனீட்டாளர்கள் கட்டி வருகின்றனர்.
மின்வாரியத்தில் வழங்கப்படும் பில்லின் பின் பகுதியில் வீடு, வர்த்தக நிறுவனங்களில் ஒரு யூனிட்டிற்கு உரிய கட்டணம், மேலும் கூடுதல் கட்டண விபரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மின் பயனீட்டாளர்கள், மின் கட்டணம் விதிப்பில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், பில்லின் பின்பக்கம் உள்ள கட்டண விபரங்களை பார்த்து அறிந்து கொள்வர்.
2023 ம் ஆண்டு மின் கட்டணப்படி வீடுகளுக்கு முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம். அதற்கு அடுத்து வரும் ஒரு யூனிட்டிற்கு ரூ.2.25 முதல் அதிகபட்சம் 500 யூனிட் வரை ஒரு யூனிட்டிற்கு ரூ.5 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது.
புதிய மின் கட்டண விபரம் இல்லை
இந்நிலையில் மின்வாரியம் ஜூலை 17 க்கு பின் புதிய மின் கட்டணத்தை அறிவித்தது. அதன்படி வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் போக, ஒரு யூனிட்டிற்கு குறைந்தது ரூ.2.35 ல் இருந்து அதிகபட்சம் (500 யூனிட் வரை) ரூ.6.30 என கட்டணம் வசூலிக்கிறது.
தற்போது மின்பயனீட்டாளர்களுக்கு மின்வாரியம் சார்பில் வழங்கப்படும் மின்கட்டண பில்லின் பின்பக்கத்தில், புதிய மின் கட்டண உயர்வு விபரத்தை வெளியிடாமல், பழைய மின் கட்டண விபரத்தை தான் வெளியிட்டுள்ளது.
இது மின் நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரியம் மின் கட்டண பில்லின் பின்பக்கத்தில், புதிய மின் கட்டண விபரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.