நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார், : சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங். வெற்றி பெற்றதை அடுத்து திருப்புத்துாரில் காங்., சார்பில் இனிப்பு வழங்கினர்.
சிவகங்கை எம்.பி.யாக இரண்டாவது முறையாக காங். கார்த்தி தேர்வு பெற்றுள்ளார். இதனையடுத்து நேற்று காலை திருப்புத்துார் காந்தி சிலைக்கு காங்., நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நகர தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் கணேசன், வடக்கு வட்டாரத் தலைவர் பிரசாந்த், நகர் செயலர் செல்வம், தொகுதி இளைஞர் காங். தலைவர் கார்த்திகைராஜா, மாவட்ட நிர்வாகிகள் வசீகரன், ஜெயச்சந்திரன், வைத்தீஸ்வரன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.