/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை காட்டு நாயக்கர் குடியிருப்பில் சுகாதார வளாகம் கட்டும் பணி தாமதம்

ADDED : ஜூன் 22, 2024 05:17 AM

மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் காட்டுநாயக்கர் குடியிருப்பில் குடும்பங்கள் உள்ளன.
இங்கு சுகாதார வளாகம் இல்லாததால் நகராட்சி சார்பில் சுகாதார வளாகம் கட்ட கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ரூ.7 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டது.
முதல் கட்டமாக குழிகள் தோண்டும் பணி துவங்கிய நிலையில் அதனைத் தொடர்ந்து பணிகள் எதுவும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காட்டுநாயக்கர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாவது:
எங்கள் குடியிருப்புகளில் கழிப்பறை இல்லாததால் திறந்தவெளியை தான் பயன்படுத்தி வருகிறோம். பொது சுகாதார வளாகம் கட்டித் தர கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணி துவங்கிய நிலையில் பணி தொடராமல் அப்படியே விட்டு சென்று விட்டனர்.
நகராட்சி நிர்வாகம் விரைவில் இப்பகுதியில் சுகாதார வளாகம் கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.