/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டுச்சாவடியை அதிகரிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை
/
ஓட்டுச்சாவடியை அதிகரிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடியை அதிகரிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை
ஓட்டுச்சாவடியை அதிகரிப்பது குறித்து அனைத்து கட்சியினருடன் ஆலோசனை
ADDED : ஆக 29, 2024 11:31 PM
சிவகங்கை : மாவட்ட அளவில் நான்கு சட்டசபை தொகுதிகளில் 1500 ஓட்டுக்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது குறித்து அனைத்து கட்சியினர் ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், கோட்டாட்சியர் சிவகங்கை விஜயகுமார், தேவகோட்டை பால்துரை, தாசில்தார்கள் சிவராமன், ராஜா, சேதுநம்பு, விஜயகுமார், நகராட்சி கமிஷனர்கள் சிவகங்கை கிருஷ்ணராம், மானாமதுரை ரங்கநாயகி, தேர்தல் தாசில்தார்மேசியதாஸ், பா.ஜ., மாவட்ட துணைதலைவர் சுகனேஸ்வரி, செயலாளர் சங்கரசுப்பிரமணியன், காங்., நகர் தலைவர் விஜயகுமார், மானாமதுரை நகர் தலைவர் புருேஷாத்தமன், தி.மு.க., நகராட்சி துணை தலைவர் கார்கண்ணன், அ.தி.மு.க., மாநில குழு தேவதாஸ், ஆம் ஆத்மி மாவட்ட செயலாளர் ராமு பங்கேற்றனர்.
கூட்டத்தில் அனைத்து கட்சியினரும், நகராட்சிகளில் வார்டுகள் பிரிப்பிற்கு பின் ஓட்டுச்சாவடிபட்டியலில் வார்டு எண்கள் விபரம் மாறியுள்ளது. அதை சரி செய்து கொள்ள வேண்டும்.
அதே போன்று 1500 ஓட்டுக்களுக்கு குறைவாக உள்ள ஓட்டுச்சாவடிகளில் வெகு தொலைவில்இருந்தால் அதையும் மக்கள் குடியிருப்பு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும். ஒரு ஓட்டுச்சாவடியில் 1500 ஓட்டுக்கு மேல் இருந்தால் அந்த ஓட்டுச்சாவடிகளை பிரிப்பது குறித்தும் ஆலோசனை செய்தனர்.
மேலும் ஓட்டுச்சாவடிகள் உள்ள பள்ளி, அங்கன்வாடி கட்டடங்களை சீரமைக்க வேண்டியிருந்தால் அது குறித்த விபரங்களையும் அனைத்து கட்சியினர் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது.