நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் செயல்படும் அச்சகங்கள் மற்றும் பிளக்ஸ் பேனர் கம்பெனி உரிமையாளர்களிடம் மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் நடக்க உள்ள விநாயகர் சதுர்த்தி, இம்மானுவேல் சேகரன் நினைவு நாள், மருதுபாண்டியர் நினைவு நாள், முத்துராமலிங்க தேவர் குருபூஜை போன்றவற்றிற்காக அடிக்கப்படும் போஸ்டர் மற்றும் பிளக்ஸ் பேனர்களில் அரசு விதிமுறைகளை மீறி வாசகங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தனர்.
மேலும் இதனை மீறும் அச்சகங்கள் மற்றும்பிளக்ஸ் பேனர்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் எனவும் தெரிவித்தனர்.

