தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கூட்டுறவு பட்டய பயிற்சி      

கூட்டுறவு பட்டய பயிற்சி      

கூட்டுறவு பட்டய பயிற்சி      


ADDED : ஜூன் 09, 2026 04:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 04:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை, ஜூன் 10-சிவகங்கையில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியில் சேர ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்குமாறு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அவர் கூறியதாவது: சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் கூட்டுறவு மேலாண்மை நிலையம் செயல்படுகிறது. இக்கல்வி (2026-= 2027) ஆண்டுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. மாணவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் ஜூலை 20 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்துடன் அதற்கான கட்டணமாக ரூ.100 இணைய வழி மற்றும் வங்கி செலான்களில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றிய வங்கி கணக்கு எண் 210008171 -ல் செலுத்த வேண்டும். பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,750. இப்படிப்பிற்கு பிளஸ் 2 தேர்ச்சி, பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 2026 ஜூலை 1 அன்று மாணவர்கள் 17 வயது முடித்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது இல்லை. இப்பயிற்சி வகுப்பு ஓராண்டு காலம் மட்டுமே தமிழில் கற்பிக்கப்படும். செமஸ்டர் முறையில் இரு முறை தேர்வுகள் நடத்தப்படும். பயிற்சி வகுப்புகள் ஆக., 3 முதல் துவக்கப்பட உள்ளது. மேலும் விபரத்திற்கு 04575 ­­- 243 995 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம், என்றார். ///

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us