தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி- மதுரை ரயில் இயக்க கோரிக்கை

காரைக்குடி- மதுரை ரயில் இயக்க கோரிக்கை

காரைக்குடி- மதுரை ரயில் இயக்க கோரிக்கை


UPDATED : ஜூன் 09, 2026 04:45 PM

ADDED : ஜூன் 09, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 09, 2026 04:45 PM ADDED : ஜூன் 09, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை;காரைக்குடியில் இருந்து சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு ரயில்கள் இயக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, காரைக்குடி ரயில்வே ஸ்டேஷன்களில் மீட்டர் கேஜ் ரயில் பாதை இருந்த போது அடிக்கடி ரயில் வசதி இருந்ததால் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் காரைக்குடியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு சென்று வந்தனர்.அதே போன்று மதுரைக்கும் ரயில்கள் சென்று வந்ததால் மானாமதுரை பகுதியில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் ஏராளமான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பணிக்கு சென்று வருவதற்கும் வசதியாக இருந்தது.

இந்த மார்க்கங்களில் அகல ரயில் பாதை மாற்றப்பட்ட பிறகு போதிய ரயில்கள் இயக்காமல் உள்ளதால் மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.ஆகவே ரயில்வே நிர்வாகம் காரைக்குடியில் இருந்து சிவகங்கை,மானாமதுரை வழியாக மதுரைக்கு தினந்தோறும் தனி ரயில்களை இயக்க வேண்டுமென பயணிகள், மாணவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us