/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடியில் நாளை ஓட்டு எண்ணும் பணி: கலெக்டர் ஆய்வு
/
காரைக்குடியில் நாளை ஓட்டு எண்ணும் பணி: கலெக்டர் ஆய்வு
காரைக்குடியில் நாளை ஓட்டு எண்ணும் பணி: கலெக்டர் ஆய்வு
காரைக்குடியில் நாளை ஓட்டு எண்ணும் பணி: கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூன் 03, 2024 03:08 AM
சிவகங்கை: சிவகங்கை தொகுதி ஓட்டு எண்ணிக்கை நாளை காரைக்குடியில் நடப்பதை அடுத்து முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆஷா அஜித், தேர்தல் பொது பார்வையாளர் ஹரீஸ் பார்வையிட்டனர்.
சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை காலை 8:00 மணிக்கு காரைக்குடி அழகப்பா செட்டியார் அரசு இன்ஜி., கல்லுாரி, அழகப்பா பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டனர்.
ஓட்டு எண்ணும் பணிக்கு வரும் வேட்பாளர்களின் ஏஜன்ட்கள் அலைபேசி, ஐ பேட், லேப்டாப் எந்த மின்னணு கருவியும் கொண்டுவரக்கூடாது. பேனா, பென்சில், குறிப்பு அட்டை, காகிதம், வாக்கு கணக்கு நகல் மட்டுமே எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பால்துரை, விஜயகுமார், சரவண பெருமாள், கலெக்டர் பி.ஏ., (தேர்தல்) ஜான்சன், தாசில்தார்கள் மேசியாதாஸ், தங்கமணி பங்கேற்றனர்.