/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டையில் 25 கிடா வெட்டி பக்தர்களுக்கு கறி ரச விருந்து
/
சாக்கோட்டையில் 25 கிடா வெட்டி பக்தர்களுக்கு கறி ரச விருந்து
சாக்கோட்டையில் 25 கிடா வெட்டி பக்தர்களுக்கு கறி ரச விருந்து
சாக்கோட்டையில் 25 கிடா வெட்டி பக்தர்களுக்கு கறி ரச விருந்து
ADDED : மே 18, 2024 05:57 AM
காரைக்குடி, : பள்ளத்துார் அருகே உள்ள மணச்சை கல்வெட்டு முனீஸ்வரர் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு 25 கிடா 100 சேவல்கள் வெட்டி பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு கறி ரச விருந்து வழங்கப்பட்டது.
மணச்சையில் கல்வெட்டு முனீஸ்வரர் கோயில் 31 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை வேல் குத்தும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கிடா அழைப்பு நிகழ்ச்சியும் மதியம் கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் பூச்சொரிதல் விழா நடந்தது. அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் சீர்வரிசை மற்றும் பூத்தட்டுக்கள் கொண்டு வந்து சுவாமிக்கு படைத்தனர். முனீஸ்வரருக்கு 25 கிடா 100 சேவல் வெட்டி பூஜை நடந்ததை தொடர்ந்து , இரவு சுவாமிக்கு அசைவ உணவு படையலிட்டு வணங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பொது மக்களுக்கு கறிரசம் விருந்து அளிக்கப்பட்டது.