
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை, -- மானாமதுரை அருகே அன்னவாசல் வழியாக நரிக்குடி செல்லும் ரோடு குண்டும் குழியுமாகி இருப்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர்.
மானாமதுரையிலிருந்து கிளங்காட்டூர், அன்னவாசல் அ.புதூர், கரிசல்குளம், தேளி வழியாக நரிக்குடி செல்லும் ரோட்டில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மானாமதுரை 4 வழிச்சாலை விலக்கு ரோட்டிலிருந்து அன்னவாசல் கிராமம் வரை ரோடு மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாகவும், பாலங்களில் உள்ள கம்பிகள் சேதமடைந்து உள்ளன. இதனால், இந்த ரோட்டில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.