/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதம்
/
அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதம்
ADDED : ஆக 20, 2024 07:11 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அறுவடை நேரத்தில் காற்றுடன் பெய்த மழையால் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்தன.
இத்தாலுகாவில் பிரான்மலை, ஒடுவன்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் விவசாயிகள் போர்வெல் தண்ணீரை கொண்டு கோடை நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில் பயிர் வளர்ந்திருந்த வயல்களில் அறுவடை நடக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதியில் காற்றுடன் பார்த்த மழை பெய்து வருகிறது இதனால் பிரான்மலை, ஒடுவன்பட்டி பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழையில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின.
சில இடங்களில் அறுவடை செய்து கொண்டிருக்கும் போதே மழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையில் நனைந்த பயிர்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுத்தர விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.