/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பழுதாகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு
/
பழுதாகி நின்ற அரசு பஸ்; போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 29, 2024 11:34 PM

திருப்புவனம் : திருப்புவனம் நரிக்குடிரோட்டில் குறுகிய வளைவில் நேற்று காலை அரசு டவுன் பஸ் பழுதாகி நின்றதால் எந்த வாகனமும்செல்ல முடியாமல் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து திருப்புவனம் வழியாக 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
நேற்று காலை 8:30 மணிக்கு காரியாபட்டியில் இருந்து வந்த டிஎன் 67 என் 0813 பஸ் நரிக்குடி ரோடு ரயில்வே கேட் இறக்கத்தில் பழுதாகி நின்றது. இதனால் இருபுறமும் எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் நீண்ட துாரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை நேரம் என்பதால் பள்ளிகளுக்கு மாணவ, மாணவியர்களை ஏற்றி வந்த பேருந்துகள், கார்கள், வேன்கள் உள்ளிட்டவைநெரிசலில் சிக்கி தவித்தன.

