/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழச்சிவல்பட்டியில் சேதமடைந்த இணைப்பு ரோடு
/
கீழச்சிவல்பட்டியில் சேதமடைந்த இணைப்பு ரோடு
ADDED : ஜூன் 15, 2024 06:49 AM

கீழச்சிவல்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம்கீழச்சிவல்பட்டியில் இளையாத்தக்குடி ரோடு,- சந்தைப்பேட்டை வரையிலான இணைப்பு ரோடு புதுப்பிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.
கீழச்சிவல்பட்டியில் உள்ள முக்கிய ரோடுகளில் மேல்நிலைப்பள்ளிக்கு அருகாமையிலான இளையாத்தக்குடி ரோட்டில்இருந்து சந்தைப்பேட்டை வரை செல்லும் இணைப்பு ரோடும் ஒன்று. இந்த ரோட்டில் இருபுறமும் வீடுகள் உள்ளன.
ஒரு கி.மீ. நீளமுள்ள இந்த ரோட்டிலிருந்து நகரின் பல பகதிகளுக்கும் விலக்கு ரோடாக தெருக்கள் பிரிகின்றன. ஊராட்சி ஒன்றிய ரோடான இந்த ரோடு போடப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. தற்போது பராமரிப்பின்றி இந்த ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது.
பல இடங்களில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மண் ரோடாகி விட்டது. இதனால் டூ வீலர்களில் வருபவர்கள் விபத்துக்குஉள்ளாகின்றனர்.
குறிப்பாக இளையாத்தங்குடி ரோடு சந்திக்கும்இடத்தில் இரவில் டூவீலர்களில் வருபவர்கள் தடுமாறி விழுவது தொடர்கதையாகி விட்டது. இதனால் இந்த ரோட்டை புதுப்பிக்க குடியிருப்புவாசிகள் கோரியுள்ளனர்.