ADDED : மே 08, 2024 05:33 AM

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட கருவூலம் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுவதால் வாகனங்களை நிறுத்த அரசு அலுவலர்கள் அச்சப்படுகின்றனர்.
சிவகங்கை கலெக்டர் அலுவலக கட்டடம் கட்டி 30 ஆண்டுகளாகிறது. இந்த வளாகத்தில் எஸ்.பி., அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், பள்ளிக்கல்வி துறை, மாவட்ட கருவூலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் ஒருங்கிணைந்து கட்டப்பட்டுள்ளது. கட்டடம் கட்டும் போது ஒவ்வொரு அலுவலகத்திற்கு எதிராகவும் டூவீலர் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனம் நிறுத்துமிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடங்களும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டடங்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மாவட்ட கருவூல கட்டடத்தின் முன்பகுதி மற்றும் பின்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. அதேபோல் எதிரே உள்ள டூவீலர் ஸ்டாண்ட் கூரை கான்கிரீட் பெயர்ந்து அடிக்கடி விழுவதால் அரசு அலுவலர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த அச்சப்படுகின்றனர்.

