/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மரத்தால் விபத்து அபாயம்
/
மானாமதுரையில் மரத்தால் விபத்து அபாயம்
ADDED : மே 22, 2024 07:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை சிவகங்கை ரோட்டில் சி.எஸ்.ஐ., காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளி எதிர்ப்புறம் பட்டுப்போன வேப்பமரம் எப்போது சாய்ந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது.
மரம் சாய்ந்து அருகில் செல்லும் மின் கம்பியில் விழுந்தால் ரோட்டில் செல்லும் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. மரத்தை அகற்றக் கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் முன் இந்த மரத்தை அகற்ற வேண்டும்.

