/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைந்து வரும் தேர்தல் வழக்குகள்
/
குறைந்து வரும் தேர்தல் வழக்குகள்
ADDED : ஏப் 12, 2024 10:45 PM
திருப்புத்துார் : சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருப்புத்துார் சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பிரசார வீதி மீறல்கள் சம்பந்தமான வழக்குகள் கடந்த தேர்தல்களை விட குறைவாகவே பதிவாகியுள்ளன.
தற்போது ஓட்டுப்பதிவிற்கு 6 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர் பிரசாரம் முடிந்து வாகனங்கள்மூலம் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. தொகுதி முழுவதும் பரவலாக ஒலி பெருக்கி பிரசாரம் நடக்கிறது.
இந்நிலையில் இதுவரை திருப்புத்துார் சட்டசபைத் தொகுதியில் மொத்தத்தில் 5 வழக்குகளே பதிவாகியுள்ளன.இதுவரை நடந்த பிரசாரத்தில் அ.தி.மு.க., நா.த., கட்சிகளின் மீது மட்டுமே தலா ஒரு வழக்கு பதிவாகியுள்ளது. மற்ற 3 வழக்குகள் பறக்கும் படையினர் பணம் கைப்பற்றியது சம்பந்தமானவை.
கடந்த 2021 சட்டசபைத்தேர்தலின் போது 17 வழக்குகளும், 2019 லோக்சபா தேர்தலின் போது 37 வழக்குகளும் திருப்புத்துார், சிங்கம்புணரி பகுதியில் பதிவாகியிருந்த நிலையில், இந்த தேர்தலில்இதுவரை 5 வழக்குகள் பதிவாகியுள்ளது.
போலீசார் கூறுகையில், தற்போதைய சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் கீழ் அனுமதி பெற்றவர்களே பிரசாரம் செய்கின்றனர்.பிரசாரத்தின் போது மாற்று கட்சியினர் நேருக்கு நேர் சந்திப்பிற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. மேலும் கட்சிகளிடையே தேர்தல் விதி பின்பற்றுவது வழக்கமாகி விட்டது என்றனர்.

