/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை
/
குறுகிய கால்வாய் பாலம் அகலப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 03, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் அம்பேத்கர் நகர் வழியாக செல்லும் பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் வாகன போக்குவரத்திற்காக மதகு பாலம் கட்டப்பட்டது.
25 ஆண்டுகளுக்கு முன் குறைந்த எண்ணிக்கையில் வாகனங்கள் சென்று வந்ததால் பாலம் குறுகியதாக கட்டப்பட்டது. தற்போது அப்பகுதியில் குடியிருப்புகளும் வாகன போக்குவரத்தும் பெருகிவிட்டதால் குறுகிய பாலத்தில்வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இப்பாலம் வழியாகவே அம்பேத்கர் நகர், கண்ணமங்கலம்பட்டி, செருதபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே இப்பாலத்தை அகலப்படுத்த அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.