/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டா கேட்டு ஊர்வலம் போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம்
/
பட்டா கேட்டு ஊர்வலம் போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம்
பட்டா கேட்டு ஊர்வலம் போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம்
பட்டா கேட்டு ஊர்வலம் போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2024 02:40 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று பட்டா கேட்டு தாலுகா அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற மக்களை போலீசார் தடுத்ததால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் பேரூராட்சி முதல் வார்டான எம்.ஜி.ஆர்., நகரில் 130 வீடுகளில் 300க்கும் மேற்பட்டோர் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களுக்கு இன்று வரை பட்டா வழங்கப்படவில்லை. எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ள பகுதி குறித்து சர்ச்சை நிலவி வருவதால் வருவாய்த்துறை பட்டா வழங்க மறுத்து வருகிறது.
இந்நிலையில் பல ஆண்டுகளாக பட்டா கேட்டுவரும் பொதுமக்கள் நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையில் போலீசார் எம்.ஜி.ஆர்.,நகரில் குவிக்கப்பட்டனர். முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி இல்லை என கூறியதை அடுத்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு வாரத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அனுப்பி முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து கலைந்து சென்றனர்.