ADDED : ஜூலை 24, 2024 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி தலைமை அஞ்சலகம் முன் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் மற்றும் அஞ்சல் நான்கு சங்கத்தினர் சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்டத் தலைவர் சிவக்குமார் தலைமையேற்றார். செயலாளர் முருகன் அகில இந்திய சம்மேளன பொதுச் செயலாளர் செல்வராஜ், அஞ்சல் நான்கு செயலர் தர்மலிங்கம், தலைவர் வெங்கடேசன், பொருளாளர் பாண்டித்துரை பேசினர். முன்னாள் தலைவர் ராஜகோபால், ஆலோசகர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.