ADDED : ஆக 28, 2024 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி அரசு மருத்துவமனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை பணியமர்த்திடவும், மருத்துவ உபகரணங்கள் இருந்தும் டெக்னீசியன் இல்லாததை கண்டித்தும், ஸ்கேன் எடுக்க நோயாளிகளை வெளியே அலைய விடுவதை கண்டித்தும் சி.பி.எம்.,மற்றும் சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. காரைக்குடி மா.கம்யூ., தாலுகா செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார்.
தாலுகா குழு உறுப்பினர்கள் பத்மநாபன் சின்ன கண்ணன், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியன், சி.ஐ.டி.யு., மாவட்ட குழு உறுப்பினர்கள் சிவக்குமார், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

