ADDED : ஜூலை 06, 2024 05:54 AM

சிவகங்கை : திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கத்தில், விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையில் டாஸ்மாக் கடை அமைத்துள்ளனர்.
இதற்கு அப்பகுதி பெண்கள், விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் கடையை அகற்ற டாஸ்மாக் நிர்வாகம் முன்வரவில்லை.
மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டரமாணிக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மார்க்சிஸ்ட் திருப்புத்துார் தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் கருப்புசாமி, ஜனநாயக மாதர் சங்க மாநில செயலாளர் ராணி பேசினர்.
மாவட்ட செயற்குழு மோகன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி, மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன், தாலுகா குழு உறுப்பினர்கள் பாலு, சக்திவேல், அமானுல்லா, ராமமூர்த்தி, சேவுகப்பெருமாள், குமார், மாதர் சங்க மாவட்ட தலைவர் பாக்கியலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் சண்முகப்பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.