/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் இயக்க அனுமதி மறுப்பு
/
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் இயக்க அனுமதி மறுப்பு
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் இயக்க அனுமதி மறுப்பு
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ராட்டினங்கள் இயக்க அனுமதி மறுப்பு
ADDED : ஏப் 17, 2024 06:20 AM

மானாமதுரை : மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் ராட்டினங்களை இயக்க அரசு துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சுவாமியை வழிபட்ட பின்னர் ஆற்றுக்குள் அமைக்கப்படும் ராட்டினங்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள்,கடைகளுக்கு சென்று விழாவை கொண்டாடுவர்.
இந்த ஆண்டு திருவிழாவிற்காக ராட்டினங்கள், மற்றும் பொழுது போக்கும் அம்சங்கள் தயார் நிலையில் உள்ளது. விழா துவங்கிய நிலையில் ராட்டினங்களை இயக்க அரசு துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
ராட்டினங்கள் இயக்கப்படாமலும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் வண்ண,வண்ண மின் விளக்குகள் எரியாமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ராட்டின உரிமையாளர்கள் கூறுகையில், ராட்டினங்களை அமைப்பதற்கு தேவையான அனைத்து சான்றுகளை வழங்கிய பிறகும் பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பல்வேறு காரணங்களை கூறி உரிய அனுமதி வழங்க மறுத்து வருகின்றனர்.
எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.ஆகவே அரசு அதிகாரிகள் ராட்டின தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் கருதி ராட்டினங்களை இயக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

