/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேவகோட்டை இறைச்சி கடைக்கு அபராதம் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
/
தேவகோட்டை இறைச்சி கடைக்கு அபராதம் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
தேவகோட்டை இறைச்சி கடைக்கு அபராதம் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
தேவகோட்டை இறைச்சி கடைக்கு அபராதம் உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
ADDED : ஜூலை 22, 2024 05:13 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் விதிகளை மீறி ரோட்டில் ஆடுகளை அறுத்து, விற்பனை செய்த 15 இறைச்சி கடைகளுக்கு அபராதம் விதித்து, 100 கிலோ இறைச்சியை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பறிமுதல் செய்தார்.
சிவகங்கை மாவட்டஉணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி தலைமையில், அலுவலர்கள் தேவகோட்டை பகுதியில் ஆடு வதை செய்யும் இடங்களில் ஆய்வு செய்தார்.
அங்கு நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டிலில் ஆடுகளை அறுக்காமல், ஆங்காங்கே ரோட்டில் சுகாதாரமற்ற முறையில் ஆடுகளை அறுத்து, கழிவுகளை தெருக்களில் வீசியிருப்பதை கண்டறிந்தனர்.
இந்த ஆய்வின் மூலம் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த, 100 கிலோ ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தார். மேலும் விதிப்படி இறைச்சி கடைகள் நடத்தாத, 15 கடைகளுக்கு அபராதம் விதித்தார்.