/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரியில் வளர்ச்சிப்பணிகள்
/
சிங்கம்புணரியில் வளர்ச்சிப்பணிகள்
ADDED : மார் 06, 2025 05:19 AM
சிவகங்கை: சிங்கம்புணரி பேரூராட்சியில் 3 ஆண்டில் ரூ.19.42 கோடி மதிப்பில் 70 வகையான வளர்ச்சி பணிகள் நடந்துள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, நடப்பாண்டு சிங்கம்புணரி பேரூராட்சியில் ரூ.23.99 கோடியில் 20 வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. அம்ரூத் திட்டத்தில் ரூ.20.98 கோடியில் குடிநீர் மேம்பாட்டு பணி, ரூ.1.17 கோடியில் ஊரணிகள் மேம்பாடு, துாய்மை இந்தியா திட்டத்தில் வளமீட்பு பூங்காவில் மேம்பாட்டு பணி, 15 வது நிதிக்குழு மானிய திட்டத்தில் ஆழ்குழாய் கிணறு, சிறுபாலம், மயான சுற்றுச்சுவர், எம்.எல்.ஏ., நிதியில் கலையரங்கு, நிழற்குடை நமக்கு நாமே திட்டத்தில் சிறுபாலம், ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணிகள், நுாலக மேம்பாட்டு திட்டத்தில் நுாலக கட்டடம், பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 3 ஆண்டில் மட்டுமே இப்பேரூராட்சியில் ரூ.19.42 கோடியில் 70 வளர்ச்சி திட்ட பணிகள் செய்யப்பட்டுள்ளன, என்றார். உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) சத்தியமூர்த்தி உடனிருந்தார்.