/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடியில் பராமரிப்பு இல்லாத தேவூரணி
/
இளையான்குடியில் பராமரிப்பு இல்லாத தேவூரணி
ADDED : செப் 12, 2024 04:57 AM

இளையான்குடி: இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட தேவூரணியில் பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால் ஊருணிக்குள் கருவேல மரங்கள் வளர்ந்தும்,குப்பை நிரம்பியும் காணப்படுகிறது.
இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம் உள்ள தேவூரணியில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ரூ.1கோடி செலவில் மராமத்து மேற்கொள்ளப்பட்டு ஊருணியைச் சுற்றி நடைபாதை அமைக்கப்பட்டு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் காலை நடைபயிற்சி சென்று வந்தனர்.
கடந்த சில மாதங்களாக இந்த ஊருணியை பராமரிக்காத காரணத்தினால் தற்போது ஊருணியை சுற்றி கருவேல மரங்களும் வளர்ந்துள்ளது.கம்பி வேலியும் சேதமடைந்து கிடப்பதால் கால்நடைகளும், நாய்களும் உள்ளே வந்து அசுத்தம் செய்கின்றன. பேரூராட்சியில் நிர்வாகத்தினர் இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.