/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் வளாகம் அருகே வாகனம் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
/
கோயில் வளாகம் அருகே வாகனம் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
கோயில் வளாகம் அருகே வாகனம் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
கோயில் வளாகம் அருகே வாகனம் அகற்ற பக்தர்கள் கோரிக்கை
ADDED : ஏப் 12, 2024 04:55 AM

மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மானாமதுரை வீர அழகர் கோயிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்.19ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் எதிர் சேவை நிகழ்ச்சி ஏப்.22ம் தேதியும்,23ம் தேதி வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இந்த 2நாட்களின் போதும் கோயில் வளாகத்தைச் சுற்றி ஏராளமான மண்டகப் படி அமைக்கப்பட்டு அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி சுவாமியை வழிபட உள்ளனர்.
இந்நிலையில் கோவில் தெற்கு புற பகுதியில் மானாமதுரை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருவிழா நேரத்தில் இடையூறாக இருக்கும் என்பதால் அந்த வாகனங்களை உடனடியாக வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

