/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரண்மனைக்கரை கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
/
அரண்மனைக்கரை கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED : மார் 14, 2025 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே அரண்மனைக்கரை கருமேனி அம்மன் கோயில் மாசி மக விழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனை வேண்டினர்.
இக் கோயிலில் மாசியில் தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம்.கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியதையடுத்து தினமும் அம்மனுக்கு அபிஷேக,ஆராதனை,பூஜை நடைபெற்று வந்தன. நேற்று முன்தினம் அம்மனுக்கு அதிகாலை பால்,பன்னீர்,சந்தனம்,நெய், இளநீர்,திரவியம் உள்ளிட்ட பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அரண்மனைக்கரை,சூராணம் ஆக்கவயல் உள்ளிட்ட கிராம பகுதி பக்தர்கள் கோயில் முன்பாக பூக்குழி இறங்கி அம்மனை வேண்டினர்.