/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல்; நீடிப்பு
/
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல்; நீடிப்பு
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல்; நீடிப்பு
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி வழங்குவதில் சிக்கல்; நீடிப்பு
ADDED : மே 17, 2024 07:02 AM

சிவகங்கை : சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அரசின் உதவித்தொகை கிடைப்பதில் இழுபறி நிலை நீடித்து வருகிறது.
மாவட்டத்தில் இரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளில் 6 முதல் 18 வரை உள்ளவர்களுக்கு, தொடர்ந்து 3 ஆண்டிற்கு மாதம் ரூ.4000 வீதம் நிதி உதவி வழங்கும் திட்டத்தை அரசு, மாவட்ட குழந்தைகள் நல மையம் மூலம் செயல்படுத்தி வருகிறது. இதற்காக இரு பெற்றோரை இழந்த குழந்தைகள், ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகள் என 4,000 பேர் வரை உதவித்தொகை கோரி விண்ணப்பித்துள்ளனர்.
இந்த மனுக்களை உரிய விசாரணை செய்து, தகுதியுள்ள முதலில் இரு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வீதம் தொடர்ந்து 3 ஆண்டிற்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.
அடுத்ததாக, ஒரு பெற்றோரை மட்டுமே இழந்த குழந்தைகளுக்கு நிதி உதவி என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர். இது வரை இம்மாவட்டத்தில் 187 குழந்தைகளுக்கு மாதம் ரூ.4000 வீதம் 3 ஆண்டிற்கு அரசு அவரவர் வங்கி கணக்கில் நிதி உதவியை வரவு வைத்துள்ளது.
4000 மனுக்கள் காத்திருப்பு
இம்மாவட்டத்தில் இரு பெற்றோரை, ஒரு பெற்றோரை இழந்த குழந்தைகள் அரசின் நிதி உதவி கோரி விண்ணப்பித்து பல மாதங்களாக காத்து கிடக்கின்றனர். 4,000 விண்ணப்பங்கள் காத்திருப்பு பட்டியலில் உள்ளன.
2500 குழந்தைக்கு நிதி உதவி
குழந்தைகள் நலத்துறை அலுவலர் கூறியதாவது: முதலில் இரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு தான் நிதி உதவி வழங்குகிறோம். அடுத்தகட்டமாக தான் ஒரு பெற்றோரை இழந்த குழந்தைக்கு தரப்படும். அந்த வகையில் அதிக மனுக்கள் வந்துள்ளதால், அதிகபட்சம் 2,500 பேருக்காவது நிதி உதவி வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம்.

