/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பூத் சிலிப் விநியோகம் துவங்கியது
/
பூத் சிலிப் விநியோகம் துவங்கியது
ADDED : ஏப் 01, 2024 10:19 PM

திருப்புவனம் : மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதிக்குஉட்பட்ட திருப்புவனம் தாலுகாவில் நேற்று பூத் சிலிப் வழங்கும் பணியை முதன்மை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ராஜா தொடங்கிவைத்தார்.
திருப்புவனம் தாலுகாவில் ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 595 ஆண் வாக்காளர்களும், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 556 பெண் வாக்காளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
மொத்தம் 324 ஓட்டுச்சாவடிகளுக்குட்பட்ட வாக்காளர்களுக்கு நேற்று முதல் பூத் சிலிப் வழங்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு பூத் சிலிப்பை முதன்மை உதவி வாக்காளர் பதிவு அலுவலர் ராஜா வழங்கினார்.
தேர்தல் துணை தாசில்தார் உமாமகேஷ்வரி, வருவாய் ஆய்வாளர் வினோத்குமார், உள்ளிட்டோர் பூத் சிலிப்களை ஊழியர்களிடம் வழங்கினர்.
திருப்புவனம் தாலுகாவில் 85 வயதிற்கு மேற்பட்ட 89 வாக்காளர்களும், மாற்றுத்திறனாளிகள் 96 வாக்காளர்களுக்கும் தபால் ஓட்டு வழங்கப்பட்டுஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

