ADDED : ஜூலை 10, 2024 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, : தமிழகத்தில் போதை பொருட்களை கட்டுப்படுத்த முடியாத தி.மு.க., அரசுக்கு எதிராக அ.தி.மு.க., சார்பில் சிவகங்கை அரண்மனை வாசலில் மக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
நகர் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., வியாபாரிகள், பஸ் பயணிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி கள்ளச்சாராய மரணங்கள் குறித்தும், முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி பிரசாரம் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், ஜெ.பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைத் தலைவர் வக்கீல் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.