/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக ஓடுதளம் வீணானது
/
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக ஓடுதளம் வீணானது
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக ஓடுதளம் வீணானது
வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக ஓடுதளம் வீணானது
ADDED : செப் 10, 2024 05:30 AM

காரைக்குடி: காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அலுவலக வாகன ஓட்டுதல் பரிசோதனை நிலங்கள் மேய்ச்சல் நிலம் போல் காட்சி அளிக்கிறது.
இங்கு, ரூ.1.93 கோடியில் திருச்சி-ராமேஸ்வரம்ரோட்டில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது. இங்கு, இதுவரை 2.30 லட்சம் வாகன பதிவு நடந்துள்ளது.
தினமும் புதிதாக லைசென்ஸ் பெறுதல், புதுப்பித்தல் பணிக்கு 100க்கும் மேற்பட்டவர்கள்வருகின்றனர். இதற்காக வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டிய பரிசோதனை இடத்தில் வாகனங்களை ஓட்டி காண்பித்து வருகின்றனர்.
இந்த ஓடுதளம் உரிய பராமரிப்பின்றி புல்கள் வளர்ந்து, கால்நடைகளின்மேய்ச்சல் நிலமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.