ADDED : ஆக 21, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி, ஆக.
22-
புதுவயல் ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என்.சி.சி., முகாம் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்த்தவ்யா பாத் அணிவகுப்பு மற்றும் கவுரவ அணிவகுப்பு யூனிட்களுக்கு இடையேயான போட்டி நடந்தது. இதில் திருச்சி என்.சி.சி குரூப் தலைமையக கமாண்டர் கர்னல் கவுரவ் சிரோஹி கலந்து கொண்டார். காரைக்குடி 9வது பட்டாலியன் பொறுப்பு அதிகாரி கர்ணன் துர்க்கேஷ் உபாத்யாய் வரவேற்றார். திருச்சி தலைமையகத்தின் கீழ் செயல்படும் 9 என்.சி.சி பிரிவுகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.
