ADDED : ஆக 21, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
சிங்கம்புணரி, ஆக. 22-
சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் தெப்பக்குளத்தை வீ த லீடர்ஸ் அமைப்பினர் சுத்தப்படுத்தினர்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அண்ணாமலை துவக்கியுள்ள வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் ஆக., மாதம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்பட்டு பல்வேறு நலப் பணிகள் செய்யப்படுகின்றன. சிங்கம்புணரியில் அந்த அமைப்பினர் மாணவர்களுக்கான மரக்கன்று நடும் போட்டியை அறிவித்து செயல்படுத்தி வருகின்றனர். நேற்று கோயில் தெப்பத்தை சுத்தப்படுத்தினர். இதில் 2 டன் குப்பையை அப்புறப்படுத்தி சிவபுரிபட்டி ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
