/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழக பட்ஜெட் அல்ல தி.மு.க., தேர்தல் அறிக்கை பா.ஜ., மூத்ததலைவர் எச். ராஜா காட்டம்
/
தமிழக பட்ஜெட் அல்ல தி.மு.க., தேர்தல் அறிக்கை பா.ஜ., மூத்ததலைவர் எச். ராஜா காட்டம்
தமிழக பட்ஜெட் அல்ல தி.மு.க., தேர்தல் அறிக்கை பா.ஜ., மூத்ததலைவர் எச். ராஜா காட்டம்
தமிழக பட்ஜெட் அல்ல தி.மு.க., தேர்தல் அறிக்கை பா.ஜ., மூத்ததலைவர் எச். ராஜா காட்டம்
ADDED : மார் 15, 2025 02:38 AM
காரைக்குடி:''தமிழக அரசு தாக்கல் செய்தது பட்ஜெட் அல்ல. தி.மு.க., வின் தேர்தல் அறிக்கை'' என பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடி அருகே கோட்டையூரில் அவர் கூறியதாவது:
குஜராத்தில் சாராய வரி கிடையாது. அங்கு 19 ஆயிரம் கோடி உபரி. ஆனால் இங்கு டாஸ்மாக் வருமானம் 51 ஆயிரம் கோடி இருந்தும் 46 ஆயிரம் கோடி பற்றாக்குறை பட்ஜெட். நிதி அமைச்சர் குஜராத் சென்று நிதி நிர்வாகம் குறித்து கேட்டறிந்து வர வேண்டும். தமிழகத்தின் நிதி சீரழிவு ஆரம்பித்தது 2006ல் தான். அப்போது தமிழகத்தின் கடன் ரூ.26 ஆயிரம் கோடி தான்.
தி.மு.க., அரசு வந்த பிறகு இரண்டே கால் மடங்கு கடன் அதிகரித்துள்ளது. தி.மு.க., வருவதற்கு முன்
தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 4 லட்சத்து 34 ஆயிரம் கோடி. தற்போது மொத்த கடன் 9 லட்சத்து 29 ஆயிரத்து 950 கோடி . தமிழகம் கடன் வாங்கி தரிசாகி கொண்டிருக்கிறது.
நிதி ஒழுக்கம் இல்லாதது தி.மு.க., அரசு. தி.மு.க., தாக்கல் செய்தது பட்ஜெட் அல்ல.அக்கட்சியின் தேர்தல் அறிக்கை.
மதுபான ஊழலின் பிறப்பிடமே தமிழகம் தான். டில்லியில் மதுபான ஊழல் வழக்கில் ஒருவர் கைதானது போல், இங்குள்ளவரும் விரைவில் கைதாவார். தேசிய கல்வி கொள்கையைமொழிக்குள் சுருக்க நினைக்கின்றனர். தி.மு.க.,விற்கு மொழி பற்று கிடையாது. 2026ல் இதற்கு தீர்வு கிடைக்கும். அமலாக்கத்துறை முழு அறிக்கை தரும் முன்பே அமைச்சர் செந்தில் பாலாஜி அவசரப்படுகிறார். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் அரசுத் துறையில் ரெய்டு நடந்ததில்லை.
தமிழக டாஸ்மாக்கில் ரெய்டு நடந்தது. ஒரு செகண்ட் போதும், வரி கொடுக்காதே என்று சொல்லி விடுவேன் என்கிறார் ஒருவர். அந்த ஒரு செகண்ட் தான் வேண்டும். நாங்கள் 356 சட்டப்பிரிவை கொண்டு வருவதற்கு என்றார்.