/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தி.மு.க., கட்சி அல்ல... கமிஷன் மண்டி: நடிகர் சிங்கமுத்து கல... கல... பேச்சு
/
தி.மு.க., கட்சி அல்ல... கமிஷன் மண்டி: நடிகர் சிங்கமுத்து கல... கல... பேச்சு
தி.மு.க., கட்சி அல்ல... கமிஷன் மண்டி: நடிகர் சிங்கமுத்து கல... கல... பேச்சு
தி.மு.க., கட்சி அல்ல... கமிஷன் மண்டி: நடிகர் சிங்கமுத்து கல... கல... பேச்சு
ADDED : ஏப் 05, 2024 12:08 AM

சிவகங்கை : தி.மு.க., கட்சி அல்ல, அது ஒரு கமிஷன் மண்டி''என அ.தி.மு.க., வேட்பாளர் சேவியர்தாஸ்- க்கு ஆதரவாக மதகுபட்டியில் நடிகர் சிங்கமுத்து பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது: தி.மு.க.,வில் இருந்து 38 எம்.பி.,க்கள் சென்றனர். கடந்த 6 மாதத்தில் தி.மு.க., எம்.பி.,க்கள் ரூ.2 லட்சத்திற்கு வடை சாப்பிட்டுள்ளனர். இத்தேர்தலில் வாக்காளர்கள் உஷாராக இருக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியில் குடிநீர் வரி, மின்கட்டணம், சொத்து வரி உயர்த்தினர்.
தி.மு.க., கட்சி அல்ல. அது ஒரு கமிஷன் மண்டி. தன் மகன் உதயநிதியை முதல்வராக மாற்ற வேண்டும் என ஸ்டாலின் செயல்படுகிறார். திருமாவளவனை முதல்வர் ஆக்கினால் தி.மு.க., சமூக நீதி ஆட்சி செய்வதாக நம்புவோம். தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் தி.மு.க., குடும்பத்தினருக்கு சொத்து இருக்கிறது.
ஜெ., ஆட்சியில் இருந்த போது பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர். இன்றைக்கு தி.மு.க., ஆட்சியில் வழிப்பறி நடக்கிறது. பல்வேறு வரி மூலம் நபருக்கு ரூ.17 ஆயிரம் வரை விதித்து விட்டு, மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகை தருவதாக மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஜெ.,வின் திட்டங்கள் அனைத்தும் மகளிர் நன்மை சார்ந்தே இருக்கும். இவ்வாறு பேசினார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கருணாகரன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்ட இளைஞர், இளம்பெண்கள்பாசறை செயலாளர்பிரபு, செந்தில் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

