/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
/
மானாமதுரையில் தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:48 PM

மானாமதுரை : மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் திருவேங்கடம், தேர்தல் பிரிவு மாநில செயலாளர் அழகர்சாமி தலைமையில் மாவட்டத்துணைச் செயலாளர் மாயழகு, ஒன்றிய செயலாளர் தர்மா ராமு, நகரச் செயலாளர் அழகு விஸ்வராஜன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமு, முன்னாள் நகரச் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகத்தில் ஏற்பட்டுஉள்ள மின் கட்டண உயர்வையும்,ரேஷன் பொருட்கள் கிடைக்காததை கண்டித்தும், காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், தமிழகத்திற்குரிய காவிரி நீரை மத்திய,மாநில அரசுகள் உடனடியாக பெற்று தர வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ரேஷன் கார்டுகளோடு கலந்து கொண்டவர்களுக்கு பருப்பு உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்கினர்.