/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவர்கள் தினம்: மரக்கன்றுகள் நடல்
/
மருத்துவர்கள் தினம்: மரக்கன்றுகள் நடல்
ADDED : ஜூலை 01, 2024 10:00 PM

காரைக்குடி:
காரைக்குடியில் தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி., மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ கழகம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
மர சித்தர் அர்ச்சுணன் தலைமையேற்று மரக்கன்றுகளை நட்டு மரங்களின் வகைகள் குறித்தும்நன்மைகள் குறித்தும் பேசினார்.
மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள்டாக்டர்கள் சலீம், காமாட்சி சந்திரன் மற்றும் தொழில் வணிகக் கழகத் தலைவர் சாமி திராவிட மணி பொருளாளர் சரவணன் மக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர்.
மானாமதுரை: மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளியில் டாக்டர்கள் தின விழாவை முன்னிட்டு முத்தனேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கணேச பாண்டியனுக்கு பாராட்டு விழா தாளாளர் கிறிஸ்டி ராஜ் தலைமையில் நடந்தது.
தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்சி, முதல்வர்கள் வள்ளி மயில், ஜீவிதா மாரி, ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்புத்துார்: திருப்புத்துார் ஆ.பி.சி.அ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் அமுதா தலைமை வகித்தார். துணை முதல்வர் அருள் சேவியர் அந்தோணிராஜ், ஒருங்கிணைப்பாளர் சபீதா பானு முன்னிலை வகித்தனர். டாக்டர் கிப்டா ஜெயா பியூலா கவுரவிக்கப்பட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆரோக்கியத்திற்கான அறிவுரைகளை விளக்கினார். பின்னர் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.