/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காற்றில் அறுந்த மின்கம்பி; பெண் மீது மின்சாரம் பாய்ந்தது
/
காற்றில் அறுந்த மின்கம்பி; பெண் மீது மின்சாரம் பாய்ந்தது
காற்றில் அறுந்த மின்கம்பி; பெண் மீது மின்சாரம் பாய்ந்தது
காற்றில் அறுந்த மின்கம்பி; பெண் மீது மின்சாரம் பாய்ந்தது
ADDED : ஆக 08, 2024 11:36 PM
தேவகோட்டை : தேவகோட்டையில் காற்றுடன் கனமழை பெய்தது. காந்தி ரோட்டில்தனியார் தொடக்கப் பள்ளியை ஒட்டிய தெருவில் மின்கம்பி அறுந்து ரோட்டில் தொங்கியது.
நேற்று காலை அந்த பகுதியில் வசிக்கும் பெண் உஷா கட்டட வேலைக்கு சென்றார். அவருடைய தாயாரும் சென்றுள்ளார். ரோட்டில் தொங்கிக்கொண்டு இருந்த மின் கம்பியை ஓரத்தில் தள்ளி விட்டுள்ளார்.
உஷா மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை மீட்க வந்த அவரது தாயார் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அந்த பகுதியைச் சேர்ந்தவர் கட்டையால் தாக்கி இருவரையும் கம்பியில் இருந்து மீட்டார்.
மின்சாரம் பாய்ந்து பாதிப்புக்குள்ளான உஷாவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் தடை செய்யப்பட்டது.