ADDED : ஜூன் 27, 2024 11:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலைப் பள்ளியில் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டு கையெழுத்து இயக்கம் நடந்தது. பள்ளித் தாளாளர் முத்துக் கண்ணன் தலைமை வகித்தார். டாக்டர் செந்தில் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் கணேஷ் வரவேற்றார்.
மாணவர்கள் போதைப் பொருள் தடுப்பிற்கான கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

