/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு டாக்டர் இல்லாததால் விபத்தில் சிக்கிய ஆசிரியர் தவிப்பு
/
அரசு டாக்டர் இல்லாததால் விபத்தில் சிக்கிய ஆசிரியர் தவிப்பு
அரசு டாக்டர் இல்லாததால் விபத்தில் சிக்கிய ஆசிரியர் தவிப்பு
அரசு டாக்டர் இல்லாததால் விபத்தில் சிக்கிய ஆசிரியர் தவிப்பு
ADDED : டிச 01, 2024 07:29 AM
இளையான்குடி : இளையான்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர் இல்லாமல் செவிலியர்கள் மட்டுமே பணியில் இருப்பதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல்தவிக்கும் நிலை உருவாகிறது.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 400க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் 20-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் காய்ச்சல், ஜலதோஷம்,சளி உள்ளிட்ட பாதிப்பிற்காக தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
சில மாதங்களாக இம்மருத்துவமனையில் 12 டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டிய நிலையில் தற்போது தலைமை டாக்டர் ஒருவர் உட்பட 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இதில் ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். இரண்டு டாக்டர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தலைமை டாக்டர் மட்டுமே கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பணி செய்து வந்த நிலையில் அவரும் பணி முடித்து சென்று விட்டார்.
நேற்று மாலை டாக்டர் யாரும் இல்லாத நிலையில் கோட்டையூர் பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட விபத்தில் வாணி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயமடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார்.
அங்கு டாக்டர் இல்லாததால் அவரது உறவினர்கள்முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாமல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

