/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காதை பிளக்கும் ஒலிமாசு; கதறவிடும் காய்கறி வண்டிகள்
/
காதை பிளக்கும் ஒலிமாசு; கதறவிடும் காய்கறி வண்டிகள்
காதை பிளக்கும் ஒலிமாசு; கதறவிடும் காய்கறி வண்டிகள்
காதை பிளக்கும் ஒலிமாசு; கதறவிடும் காய்கறி வண்டிகள்
ADDED : ஆக 29, 2024 11:28 PM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி பேரூராட்சியில் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறுகிறது. இச்சந்தைக்கு உள்ளே கடை போடாத சில வியாபாரிகள், மெயின் ரோட்டில், குறிப்பாக நான்கு ரோடு சந்திப்பு முதல் திண்டுக்கல் ரோட்டில் ஆர்ச் வரை ஆங்காங்கே வேன்களில் காய்கறிகளை நிரப்பி நிறுத்திக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர்.
ஒரே இடத்தில் 10க்கும் மேற்பட்ட வண்டிகளில் கத்தரி, தக்காளி, வெங்காயம் என ஒலிபெருக்கியில் சத்தமாக கூவி விற்கின்றனர். இது அப்பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமில்லாமல் அவ்வழியாக நடந்து செல்லும் மக்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
ஒரே குறிப்பிட்ட வாசகத்தை ஒரே இடத்தில் நின்று கொண்டு மணிக்கணக்கில் தொடர்ந்து ஒலிபரப்பும்போது அதை கேட்பவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பு ஏற்படுகிறது. காய்கறி வண்டிகள் அதிகமாகும் சூழலில் போட்டி போட்டுக் கொண்டு சத்தத்தை அதிகப்படுத்தி வைத்துக்கொண்டு வருவோர் போவோரை வியாபாரிகள் கதறவிடுகிறார்கள்.
எனவே கடை வீதியில் ஒரே இடத்தில் நிறுத்தி வியாபாரம் செய்யும் வாகனங்களில் ஒலிப்பெருக்கி இல்லாமல் பார்த்துக்கொள்ள பேரூராட்சியும், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

