ADDED : ஜூன் 27, 2024 11:30 PM
சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகரில் உள்ள கல்வித்துறை ஆடிட்டோரியத்தில் அனைத்து வங்கிகள் சார்பில் இன்று (ஜூன் 28) சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெறுகிறது.
இம்மாவட்டத்தை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கல்விக்கடன் முகாம் நடைபெறும்.
கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் www.vidyalakshmi.co.in இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
முகாமிற்கு வரும் போது விண்ணப்ப நகல் மற்றும் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், இருப்பிடம், வருமானம், ஜாதி சான்று நகல், பான்கார்டு, ஆதார் அட்டை நகல், கல்லுாரியில் பெற்ற உறுதி சான்று, கல்வி கட்டண விபரம், பத்து மற்றும் பிளஸ் 2, இதர பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றுதழுடன் வரவேண்டும்.
முதல் பட்டதாரியாக இருந்தால், அதற்கான சான்றுடன் வரவும்.

