/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி மாணவர்களுக்கு முட்டை நிறுத்தம்
/
பள்ளி மாணவர்களுக்கு முட்டை நிறுத்தம்
ADDED : ஏப் 12, 2024 04:49 AM
காரைக்குடி: சிவகங்கை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் முட்டை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் வாரத்தில் ஐந்து நாள் மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கப்படுகிறது.
தற்போது, விடுமுறை நாள் அறிவிப்பில் ஏற்பட்ட குழப்பத்தால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப். 10 ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் முட்டை வழங்கப்படவில்லை.
பெற்றோர் கூறுகையில்:
தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பள்ளி இயங்குகிறதா இல்லையா என்ற குழப்பம் மாணவர்களிடையே ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது பள்ளியில் மதிய உணவில் முட்டை வழங்கப்படவில்லை. முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரம் கூறுகையில்: தற்போது தேர்வு நேரம் என்பதால் பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்து உள்ளதாக சத்துணவு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
இதனால் முட்டை அனுப்ப தேவையில்லை என்று அமைப்பாளர்கள் தெரிவித்ததன் பேரில் முட்டை வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது என்றனர்.

