ADDED : மார் 01, 2025 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கையில் கல்லுாரி வளாகத்தில் முதியவர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
சிவகங்கை, மதுரைரோடு பர்மாகாலனியை சேர்ந்த விஜயன் மகன் நாகராஜ் 62. வெளிநாட்டில் வேலைபார்த்தார். வயது முதிர்வின் காரணமாக சிவகங்கையில் மனைவி கமலத்துடன் வசித்து வந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்டு சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக உடல் நிலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
இதனால், நேற்று காலை அரசு மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறி சென்ற நிலையில் அரசு கல்லுாரி வளாகத்தில் உள்ள மரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் அன்னராஜ், எஸ்.ஐ., பார்த்தசாரதி ஆகியோர் விசாரிக்கின்றனர்.